முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்.3, 4ல் கலெக்டர், போலீஸ் மாநாடு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 3 மற்றும் 4ம் தேதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3.10.2023 மற்றும் 4.10.2023 தேதியன்று சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்வர்.

இந்த இரண்டு நாள் மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு நிலை உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகள் குறித்து விரிவான ஆய்வினை முதல்வர் மேற்கொள்வார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் விதமாக அரசு பல்வேறு புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை ஆய்வு செய்யவும், அவற்றை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து உரிய அறிவுரைகளை வழங்குவதற்கும் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்