ஓட்டந்தாங்கல் கிராமத்தில் குழந்தைகள் இல்லத்தினை கலெக்டர் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம்: ஓட்டந்தாங்கல் கிராமத்தில் இயங்கி வரும் புனித அந்தோனியர் குழந்தைகள் இல்லத்தினை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம், ஓட்டந்தாங்கல் கிராமத்தில் சமூகப்பாதுகாப்பு துறையின் கீழ், புனித அந்தோனியார் குழந்தைகள் இல்லம் இயங்கி வருகிறது. இந்த இல்லத்தில், 12 குழந்தைகள் தங்கியுள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், புனித அந்தோனியர் குழந்தைகள் இல்லத்தினை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, அங்குள்ள 12 குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான உணவு மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்டு, இல்லத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, கலெக்டர் கலைச்செல்வி மோகன் முன்னிலையில் இல்ல குழந்தைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதனால், அனைத்து குழந்தைகளுக்கும் எழுதுபொருட்கள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார்.

பின்னர், குழந்தைகளிடம் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதன் நன்மைகள் குறித்தும், சத்தான உணவுகள் மற்றும் காய்கறிகள் உண்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். இதனையடுத்து, இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த குழந்தைகளிடம், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார். ஆய்வின்போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது