கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் பனை விதைகள் சேகரிப்பு, விதைப்பு ஆலோசனைக் கூட்டம்

ஊத்துக்கோட்டை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய பனைமரங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், பனைவிதைகளை அதிகளவில் விதைத்து வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக “பனைவிதை வங்கி” என்ற ஒரு சிறப்பு திட்டத்தை கடந்த ஆண்டு முதல் தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.

இந்த ஆண்டு அந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதில் முதல் கட்டமாக நேற்றுமுன்தினம் காலை கும்மிடிப்பூண்டி ஒன்றிய அலுவலகத்திலும், மதியம் எல்லாபுரம் ஒன்றிய அலுவலகத்திலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பனைவிதைகள் வங்கி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

பெரியபாளையம் துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் ஜோன்மேரி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர்கள் மற்றும் மக்கள் நலப்பணியாளர்கள் பணிதள பொறுப்பாளர்கள் என அனைவரிடமும் இந்த திட்டம் ஊராட்சி அளவில் சிறப்பாக செயல்படுத்தும் விதமாக, பனை விதைகளை சேகரிக்க கூடிய ஊராட்சி மற்றும் பனை விதைகளை விதைக்க கூடிய ஊராட்சிகளின் பணியாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

Related posts

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு

மழை நீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உத்தரவு

மின்சார வாரிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24X7 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு