கோவையிலிருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு: 150 பயணிகள் உயிர் தப்பினர்

கோவை: கோவை பீளமேடு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், மும்பை, சென்னை, கொல்கத்தா, டில்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் தினமும் பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்கு நேற்று அதிகாலை 3.45 மணிக்கு 150 பயணிகளுடன் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தின் முன் பக்க டயரில் காற்று இல்லாமல் இருப்பது தெரியவந்தது. விமானி அளித்த தகவலின்பேரில் அங்கு அந்த ஊழியர்கள் டயரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!