கோவை, நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை லேட்டஸ்ட் அப்டேட்

சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென்னிந்தியப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 3 நாட்களுக்கு வங்கக்கடலில் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடலில் சூறாவளி காற்று வீசும். அரபிக் கடல் பகுதியில் 3 நாட்களுக்கு மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். கேரள தென்கிழக்கு அரபிக் கடல், கர்நாடக கடலோரம், லட்சத்தீவு -மாலத்தீவு பகுதிகளிலும் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹரியானா சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி; காங்கிரஸ் ரூ.2,000 அறிவித்த நிலையில் பாஜக ரூ.2,100 அறிவிப்பு..!!

ரெட்டியார்சத்திரம் அருகே 10  மயில்கள் விஷம் வைத்து கொலை?

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!!