கோவை முப்பெரும் விழா திமுக மாணவர் அணியினர் திரண்டு வர வேண்டும்: சி.வி.எம்.பி.எழிலரசன் அழைப்பு

சென்னை: திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. நேற்று வெளியிட்ட அறிக்கை: கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவாகவும், திமுக தலைவரும், இந்தியா கூட்டணி, தமிழ்நாட்டில் நாற்பதுக்கு நாற்பது இடங்களில் வெற்றிக்கு ஓயாமல் உழைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழாவாகவும், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் நாளை மாலை 4 மணியளவில் கோவை கொடிசியா மைதானத்தில் திமுக முப்பெரும் விழா நடக்கிறது. இதில், திமுக மாணவர் அணியின் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள், கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள், மாணவர் அணி மீதும் ஈடுபாடு கொண்ட நண்பர்களையும் பெருந்திரளாக அழைத்துக் கொண்டு திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க அடலேறுகளே அணி திரண்டு வாரீர், வாரீர் என அன்போடு அழைக்கின்றேன்.

Related posts

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை; கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!