கோயம்பாக்கம் பாலாற்றங்கரையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சியில் உள்ள கோயம்பாக்கம் கிராமம், பாலாற்று படுகையையொட்டி உள்ளது. இந்நிலையில், நேற்று இங்குள்ள மக்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காக பலாற்று பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கு 2 கால்கள் மட்டும் வெளியே தெரிந்த நிலையில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டு இருந்தது. இதனைகண்டு, அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் இதுகுறித்து வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் மற்றும் வாலாஜாபாத் வட்டாட்சியர் ஆகியோர், பாலாற்றங்கரையில் அழுகிய நிலையில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் பிரேதத்தை தோண்டி, உடற் கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, சமீபத்தில் இந்த பகுதியில் யாராவது காணாமல்போய் உள்ளனரா அல்லது கொலை செய்து இப்பகுதியில் புதைத்துவிட்டு சென்று விட்டார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்பாக்கம் பாலாற்றங்கரை பகுதியில் சடலம் புதைக்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு