கோவையை சேர்ந்த நகை வியாபாரியிடம் ஓடும் ரயிலில் 600 கிராம், ரூ.8.46 லட்சம் கொள்ளையடித்த 6 பேர் கும்பல் கைது

திருப்பூர்: கோவையை சேர்ந்த நகை வியாபாரியிடம் ரயிலில் கொள்ளையடித்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 6 பேர் கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்து, 600 கிராம் தங்ககட்டிகள், ரூ.8.46 லட்சத்தை மீட்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சுபாஷ் (40). இவர் 15 வருடங்களுக்கு மேலாக கோவை பாரதி விலாஸ் பகுதியில் தங்க நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த மாதம் 16ம் தேதி சுபாஷ் நண்பர்களுடன் பெங்களூரு சென்று நகைகளை கொடுத்துவிட்டு 595.14 கிராம் தங்கக்கட்டிகளையும், நகைகள் விற்ற ரூ.10 லட்சத்து 10 ஆயிரத்து 200 பணத்தையும் எடுத்துக் கொண்டு குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூருவில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தார். திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்று மீண்டும் புறப்பட்டபோது 20, 25 வயது மதிக்கத்தக்க 4 பேர் அவரது பையை கொள்ளையடித்து சென்றனர்.

புகாரின்படி திருப்பூர் ரயில்வே போலீசார் 4 தனிப்படை அமைத்து கொள்ளையரை தேடி வந்த நிலையில் நேற்று சேலம் புதிய பேருந்து நிலையத்தில் 6 பேரை சுற்றிவளைத்தனர். விசாரணையில் அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த ஸ்வன்பானி சாவன் (22), விஜய் குண்டாலக் ஜாங்கலே (20), அமர்பாரத் நிம்ஹிர் (20), அன்கீத் சுபாஷ்மான் (23), சைதன்யா விஜய் ஷிண்டே (20), கவுரவ் மாரூதி (19) என்பதும், வியாபாரி பெங்களூருவில் இருந்து நகைகளை கொடுத்துவிட்டு ரயிலில் பணம், தங்க கட்டிகளுடன் வருவதை நோட்டமிட்டு கொள்ளையடித்தவர்கள் என்றும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து, 595.14 கிராம் தங்க கட்டிகள் மற்றும் ரூ.8.46 லட்சம், ஐபோன் ஆகியவற்றை கைப்பற்றினர்.

Related posts

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் கார்டியோவாஸ்குலர் டெக்னீஷியன்கள் பணி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்