கோவை அருகே காப்புக்காடு பகுதியில் பெண் யானை உயிரிழப்பு

கோவை: மாங்கரை அருகே தடாகம் காப்புக்காடு பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்துள்ளது. பெண் யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை, மாங்கரை காப்புக்காடு பகுதியில் பெண் யானை உயிரிழந்தது வனத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடாகம் காப்புக்காட்டிற்கு வெளிய 10 மீட்டர் தொலைவில் காட்டுயானை உயிரிழந்துள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் சமீப காலங்களில் சீரான இடைவெளியில் யானைகளின் உயிரிழப்பு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. வனத்துறை மருத்துவர்களும் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த சில 10 நாட்களுக்கு முன்பு யானை உயிரிழப்பு தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில் காப்புக்காடு பகுதியில் யானை உயிரிழந்தது தொடர்பான முக்கிய காரணங்கள் குறித்து பிரேத பரிசோதனையை கால்நடை வன அலுவலர்கள் நேரடியாக செய்த பிறகே யானையின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்