கோவை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு

கோவை: கோவை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார். கடந்த ஜூலை 3ம் தேதி மருத்துவ காரணங்களுக்காக தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து, மேயர் பதவி காலியானதாக மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது, கல்பனா ஆனந்தகுமார், 19வது வார்டு கவுன்சிலராக மட்டும் உள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக மேயர் பதவி காலியாக இருந்த நிலையில், புதிய மேயர் வேட்பாளர் யார்? என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று திமுக சார்பில் வெளியிடப்பட்டது. அதன்படி, 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி புதிய மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை யொட்டி கோவை சுகுணா ஆடிட்டோரியத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்களின் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் கன்கே.என்.நேரு. சு.முத்துசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல் படி மேயர் வேட்பாளராக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி தேர்வு செய்யப் பட்டுள்ளதாக அமைச்சர்கள் அறிவித்தனர். ரங்கநாயகிக்கு கவுன்சிலர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் அமைச்சர்கள் கேட்டுக் கொண்டார். கோவை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சியில் 29-வது வார்டு கவுன்சிலராக ரங்கநாயகி உள்ளார்.

ரங்கநாயகியை தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கோவை மாநகராட்சியின் 7-வது மேயராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர் தேர்தலில் வெற்றுபெற்றதற்கான சான்றிதழையும் அவர் பெற்றுக்கொண்டார். மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரங்கநாயகி, கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். தற் போதும் வாடகை வீட்டில் தான் வசிக்கிறார். இவரது கணவர் பெயர் ராமச்சந்திரன். இவர், 29வது வார்டு திமுக செயலாளராக உள்ளார். பத்திரம் விற்ப னையாளராக உள்ளார்.

ரங்கநாயகி, 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு, குகன் என்ற மகனும், வாகினி என்ற மகளும் உள்ளனர். குகன், கல்லூரி படிப்பும், வாகினி 9ம் வகுப்பும் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு