கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான அல் உம்மா தலைவர் பாஷாவுக்கு பரோல்

கோவை: கோவை மாநகரில் கடந்த 1998ம் ஆண்டு பல இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 58 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் அல் உம்மா இயக்க தலைவர் கோவை தெற்கு உக்கடம் அன்பு நகரை சேர்ந்த பாஷாவுக்கு (83) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கடந்த 25 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் தனது உடல் நலத்தை காரணம் காட்டி பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதன் பேரில் அவருக்கு 3 நாள் பரோல் வழங்கி கோவை மத்திய சிறை நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதனையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

மின்னஞ்சல் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மிரட்டல் விடுத்த நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை