கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்

கோவை: கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் வெளியான அறிக்கையில்; “மாநில அமைப்பு பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் A.P.முருகானந்தம் மற்றும் மாநில பொருளாளர் S.R.சேகர் ஒப்புதலுடன் கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கை மண்டல் தலைவராக செயல்பட்டு வந்த R.சதீஷ் கட்சியின் ஒற்றுமை மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் கட்சியினுடைய அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்படுகிறார்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

லெபனான், சிரியாவில் ஒரே நேரத்தில் ‘சைபர்’ தாக்குதல்; தைவானின் 5,000 ‘பேஜர்’ சாதனம் ெவடிகுண்டாக மாறியது எப்படி?.. அமெரிக்கா கைவிரிப்பு; இஸ்ரேல் உளவு அமைப்புக்கு தொடர்பு?

ரூ.2,104 கோடி மதிப்பில் சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!!