கோவையில் இன்று அழகு சாதன விற்பனை கடையில் பயங்கர தீ

கோவை: கோவையில் இன்று அழகு சாதன பொருட்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. பல லட்சம் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.கோவை ராம்நகர் ராஜாஜி வீதி பகுதியில் நிக்கித் என்பவருக்கு சொந்தமான அழகு சாதன பொருட்கள் மொத்த விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. 3 மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த கடையில் முதல் தளத்தில் இருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென கரும்புகை வெளியேறியது. திடீரென தீ பிடித்து எரிய துவங்கியது. மளமளவென பற்றி எரிந்த தீ 2வது தளத்திலும் பரவியது.

இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு நிலையங்களில் இருந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. காட்டூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மேல்மருவத்தூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 10 பேர் காயம்

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து