கோயம்புத்தூரில் ஆக.1 முதல் 5 வரை ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோயம்புத்தூர் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம், கோவை நேரு ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் டெக்னிகல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் ஆகிய பணிகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அக்னிவீர் டிரேட்ஸ்மேன் 8ம் வகுப்பு தேர்ச்சி ஆகிய பிரிவுகளில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள், பேரணியில் கலந்துகொள்வதற்காக அட்மிட் கார்டு பெற்றவர்கள் கட்டாயம் கொண்டு வர வேண்டும். கடந்த பிப்ரவரி 12ம் தேதியிட்ட பேரணி அறிவிப்பின்படி பேரணி தளத்திற்கான அனைத்து ஆவணங்களும் www.joinindianarmy.nic.in-இல் பதிவேற்றப்பட்டன. ஆள்சேர்ப்பு செயல்முறை முற்றிலும் ஆன்லைன் மூலமாக நியாயமான மற்றும் வெளிப்படையான தன்மையுடன் நடைபெறும்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு