கோவை ஏ.டி.எம்.-மில் நூதனமுறையில் திருட்டு

கோவை குனியமுத்தூரில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். இயந்திரத்தில் டேப் ஒட்டி நூதன முறையில் ரூ.30,000 திருட்டு நடந்துள்ளது. கோவை, அவினாசி உள்பட இடங்களில் 5 ஏ.டி.எம். மையங்களில் இதேபோல் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு முன்பு ஏ.டி.எம். இயந்திரத்தில் டேப் ஒட்டிவிட்டு கொள்ளையர்கள் சென்றுவிடுகின்றனர். வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஏ.டி.எம். இயந்திரத்தில் ரகசிய எண்ணை பதிவுசெய்து பணம் வரவில்லை என சென்றவுடன் கைவரிசை காட்டியுள்ளனர். ஏ.டி.எம். இயந்திரத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்த நபர்களே நூதன கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஏ.டி.எம். மையங்களில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கும் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

மணிப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்

வேட்டவலம் அடுத்த தளவாய்குளம் வாரச்சந்தையில் ₹80 லட்சத்திற்கு வர்த்தகம்

காலாண்டு விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்