கோவையில் இணையதளத்தை பார்த்து திருட்டில் ஈடுபட்ட தம்பதி கைது!!

கோவை: கோவில்பாளையம் பகுதியில் உமாசங்கர் என்பவரது வீட்டில் ரூ.9 லட்சத்தை திருடிய வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். திருட்டில் சிக்காமல் தப்பிப்பது எப்படி என இணையதளத்தை பார்த்து கைவரிசை காட்டிய தம்பதி கைது செய்யப்பட்டனர். உமா சங்கரின் வீட்டின் கீழ் வசித்து வந்த சிவசங்கர் என்பவரது வீட்டிலும் 7.5 சவரன் நகை, ரூ.35,000 கொள்ளை போனது. விசாரணையில் உமா சங்கர் வீட்டின் கீழ் வசித்து வரும் சிவசங்கரே திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது. சிவசங்கரின் செல்போனை ஆய்வு செய்ததில், திருட்டில் ஈடுபட்டு சிக்காமல் இருப்பது எப்படி என தேடிய விவரம் இருந்தது. திருட்டில் ஈடுபட்ட சிவசங்கர் கவிதா தம்பதியை கைது செய்து ரூ.9 லட்சத்தை போலீஸ் பறிமுதல் செய்தது.

Related posts

சென்னை, தியாகராயநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

இன்று ஒரே நாளில் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றம்: மாநகராட்சி அறிக்கை