கோவை உக்கடம் அருகே எரிவாயு நிரப்ப வந்த காரில் பயங்கர தீ விபத்து..!!

கோவை: கோவை உக்கடம் பகுதியில் அடுத்தடுத்து 3 வாகன எரிபொருள் நிரப்பு மையங்கள் உள்ளது. 2 பெட்ரோல் பங்குகளும் 1 சி.என்.ஜி கேஸ் பங்க் ஆகவும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ஆம்னி வேன் ஒன்று சி.என்.ஜி கேஸ் மையத்திற்கு எரிவாயு நிரப்ப வந்துள்ளது. அப்போது திடீரென ஆம்னி வேனில் ஒரு பகுதியில் தீ பிடிக்க தொடங்கியது. உடனடியாக ஆம்னி வேனை பங்க்க்கு அருகில் தள்ளி நிறுத்திவிட்டு உள்ளே இருந்த ஓட்டுநர் வெளியே தப்பினார். ஆம்னி வேன் முழுவதுமாக தீயில் எரிய ஆரம்பித்தது. இதை அடுத்து அங்கிருந்த பங்க் ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த கோவை தெற்கு தீயணைப்பு துறையினர் ஆம்னி வேனில் பற்றிய தீயை முழுமையாக அணைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனத்தின் உரிமையாளர் யார். எதனால் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. 3 பெட்ரோல் பங்க்கள் இருக்கக்கூடிய பகுதியில் எரிவாயு மையத்திலேயே திடீரென ஆம்னி வேன் தீ பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தீ விபத்து ஏற்பட்ட உடனேயே எரிபொருள் மையத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வெளியேறினர். மேலும் அப்பகுதியில் வாகனங்கள் செல்லாதவாறு போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்லும் சாலை வழியாகவே இயக்க அனுமதிக்கப்படவில்லை.

Related posts

சென்னை, தியாகராயநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

இன்று ஒரே நாளில் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றம்: மாநகராட்சி அறிக்கை