கோவையில் உரிய அனுமதியின்றி பாம்பை பிடித்து வித்தைக் காட்டி வீடியோ பதிவிட்ட இருவர் கைது

கோவை: கோவையில் உரிய அனுமதியின்றி பாம்பை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பெண் உட்பட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் மற்றும் சின்னவேடம் பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரி ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய எலி பாம்பு ஒன்றை பிடித்து அதை வைத்து வீடியோ பதிவு செய்துள்ளனர். அதில் பாம்பை கண்டால் பொதுமக்கள் அலறக் கொள்ளக் கூடாது, எங்களைப்போன்ற தன்னார்வலர்களை தொடர்பு கொள்ள வேண்டும், பாம்பு மனிதர்கள் அளவுக்கு விஷமுடையது அல்ல எனக் கூறியுள்ளனர்.

இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி அனுமதியின்றி பாம்புகளை பிடிக்கக் கூடாது. அந்த அடிப்படையில் அனுமதியின்றி பாம்பை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட அப்துல் ரகுமான் மற்றும் உமா மகேஸ்வரி ஆகிய இருவர் மீதும் கோவை வனச்சரக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இதே போல் பொதுமக்கள் யாரும் உரிய அனுமதியின்றி பாம்பு மற்றும் வன விலங்குகளை பிடிப்பதோ அதனை வீடியோ பதிவு செய்வதோ கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.

Related posts

மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி