தமிழ் எழுத்துக்கள் மூலம் செய்யப்பட்ட உலகின் முதல் திருவள்ளுவர் சிலை.. கோவையில் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரதிபலிக்கும் சிற்பங்கள்

கோவை: கோவையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிற்பம் காண்போரை பெரிதும் கவர்ந்திருக்கிறது. கோவையில் பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிச்சிக்குளம் ஏரிக்கரை அருகே இந்த கம்பீரமான திருவள்ளுவர் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 2.5 டன் எடையும், 15அடி அகலமும் கொண்ட திருவள்ளுவர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் எழுதிய 1,330 திருக்குறளை போற்றும் வகையில் 247 தமிழ் எழுத்துக்களை உபயோகித்து செய்யப்பட்டுள்ளதாக அதனை வடிவமைத்த பொறியாளர் தெரிவித்துள்ளார். கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி செலவில் குறிச்சிக்குளம் உள்பட 7 பழமையான ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஏரியின் முகப்பு மேம்படுத்தப்பட்டு தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்டிகைகளை பிரதிபலிக்கும் வகையில் சிற்பங்கள் கொண்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்