கோவை சாய்பாபா காலணி பகுதியில் 2 பயிற்சி மருத்துவர்கள் இல்லத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

கோவை: கோவை சாய்பாபா காலணி பகுதியில் 2 பயிற்சி மருத்துவர்கள் இல்லத்தில் இன்று அதிகாலை 6 மணி முதல் 7.30 மணிவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து 2 தனிப்படையாக வந்துள்ளனர். கோவை மாநகர போலீசார் உதவியுடன் இந்த சோதனையானது நடத்தப்பட்டது.

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டதா அல்லது கடந்த 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக சோதனை நடைபெற்றதா என சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களது இல்லத்தில் இருந்து எந்த விதமான ஆவணங்கள் எடுக்கப்பட்டது. மருத்துவர்களுக்கு இந்த வழக்கில் என்ன தொடர்புள்ளது என்பன குறித்த தகவல்களை என்.ஐ.ஏ அறிக்கையாக வெளியிடவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது மட்டுமின்றி கர்நாடக மாநிலத்திலும் ஒருசில இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது தெரியவந்துள்ளது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கை இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?