கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு

சென்னை: கோவையில் கலைஞர் பெயரில் நூலகம், அறிவியல் மையம் அமைக்கப்படும் என நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட உள்ள கலைஞர் நூலகம் 2026 ஜனவரியில் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். கலைஞர் நூலகம், அறிவியல் மையம் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது பொதுப்பணித்துறை. உலகத் தரம் வாய்ந்த நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள், இணைய வளங்களும் இடம்பெறும் வகையில் நூலகம் அமைக்கப்பட உள்ளன. விருப்பம் உள்ள நிறுவனங்கள் அக்டோபர் 16-ம் தேதி மாலை 3 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Related posts

பழனி பஞ்சாமிர்தம் காலாவதி தேதி 30 நாட்களாக உயர்வு..!!

SIPCOT-ல் அமையும் கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை!

சித்தூரில் பைக் மோதிய தகராறு வாலிபரை தாக்கிய 4 பேர் கைது