கோவை தொண்டாமுத்தூரில் யானைகளை அடர்வனத்திற்குள் விரட்டும் பணிகள் தீவிரம்: கூடுதல் குழுக்கள் அமைத்து விரட்ட கோரிக்கை

கோவை: கோவை தொண்டாமுத்தூரில் யானைகள் கூட்டமாக ஊருக்குள் புகுந்திருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மேற்குத்தொடர்ச்சி மலையில் இருக்க கூடிய அய்யாசாமி மலைப்பகுதியிலிருந்து நள்ளிரவு 10க்கும் மேற்பட்ட யானைகள் ஊருக்குள் புகுந்தது. செல்லப்பகவுண்டர் புதூர் பகுதிக்குள் புகுந்த யானைகள் நள்ளிரவு தோட்டத்தை கடந்து ஊருக்குள் இருக்கக்கூடிய வீதிகளிலும் உலா வந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறை மூன்று குழுக்கள் அமைத்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் ஒரு குழு கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 4 குழுக்கள் யானைகளை விரட்டக்கூடிய பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ஏற்கனவே 5 யானைகள் வனத்திற்குள் சென்றிருக்க கூடிய சூழலில் எஞ்சி இருக்கக்கூடிய குட்டி உட்பட 6 யானைகள் முட்புதர்களுக்குள் தஞ்சம் அடைந்துள்ளது. முட்புதரை சுற்றி வனத்துறை அதிகாரிகள் 4 பகுதிகளிலும் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. யானைகள் பகல் நேரத்திலும் ஊருக்குள் உலா வருவதினால் பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் யானைகள் இருக்கக்கூடிய சுற்றுவட்டார சாலையில் பயணிக்க வேண்டாம் என்றும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது