கோவை சிட்டி படங்களுக்கான புட்நோட்: காங். சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

 

கோவை, ஏப். 27: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளராக கோவையை சேர்ந்த கோட்டை செல்லப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் இம்ரன் பிரதாப் கார்கி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோரது ஒப்புதலுடன், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் அஸ்லம்பாஷா நியமித்துள்ளார். கோவையை சேர்ந்த ஒருவர் இப்பொறுப்புக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. இவருக்கு, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்.பி., காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏ எம்.என்.கந்தசாமி, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கருப்புசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு