கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம்: 13வது நபரை கைது செய்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை..!!

கோவை: கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக 13வது நபரை கைது செய்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. கோவை மாநகர், உக்கடம் ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்தது. இதில் காரை ஓட்டி வந்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வை கோவை மாநகர காவல்துறை விசாரித்து பின்னர் தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது.

இந்நிலையில் ஜமேசா முபின் உறவினர் உட்பட 13 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக விசாரணையில் ஈடுபட்டிருந்த போது கடந்த சில வாரங்களுக்கு முன்பு முகமது அசாருதீன் மற்றும் இத்ரீஸ் என்பவர்கள் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இருவரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவை உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ள குழந்தை கவுண்டர் பகுதி வீதியில் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் அசாருதீன் ஜிஎன் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதால் அவரை நேரடியாக அழைத்துவந்து விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளனர். இந்த வழக்கில் தற்போது வரை 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கேரளா சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகமது அசாருதீனை சந்தித்து வந்த பிறகு இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் அவர் இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டுள்ளதாகவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகள் மற்றும் இடங்களில் அழைத்து சென்று விசாரணை நடத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி