கோவை மாவட்டத்தில் செங்கல் சூளையில் ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பு: ஐகோர்ட்டில் சுரங்கத்துறை தகவல்

சென்னை: கோவை மாவட்டத்தில் செங்கல் சூளைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சுரங்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 14 செங்கல் சூளைகள் சட்டவிரோதமாக செயல்படுவதாக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்தார். ஆலந்துறை, தேவராஜபுரம், வெள்ளிமலைப்பட்டினம், கரடிமடையில் செம்மண் கொள்ளை தொடர்பாக ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்தார். கடந்த 25ம் தேதி ஆட்சியர், கனிம வளத்துறை உதவி இயக்குநர் ஆய்வு செய்த பிறகும் செம்மண் கொள்ளை தொடர்கிறது என மனுதாரர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.இந்த நிலையில் இவ்வழக்கில் சட்டவிரோதமாக செங்கக் சூளைகளை தடுக்க நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம் மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. சுரங்கத்துறை உதவி இயக்குநர் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயரும் குறிப்பிடப்படவில்லை என நீதிபதிகள் தெரிவித்த நிலையில், செம்மண் கொள்ளை நடக்கும் பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை தர கோவை லோக் அதாலத் தலைவர் நாராயணனுக்கு ஆணையிட்டதுடன் மாவட்ட லோக் அதாலத் தலைவருக்கு தேவையான உதவிகளை வழங்க ஆட்சியர் உள்ளிட்டோருக்கு உள்ளிட்டோருக்கு உத்தரவு வழங்கியது. கனிம வளத்துறை உதவி இயக்குநர், எஸ்.பி.க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் .4-க்கு ஒத்திவைத்தனர்.

 

Related posts

குஜராத் வெள்ளம்: 26 தமிழர்களை அழைத்துவர நடவடிக்கை

சாத்தூர் வெடி விபத்து: பட்டாசு ஆலை உரிமம் ரத்து

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை வகுத்து அரசாணை வெளியீடு..!!