கோவையில் குண்டு வெடிக்கும்: இமெயிலில் மிரட்டல்

கோவை: கோவையில் பல இடங்களில் குண்டு வெடிக்கும் என இமெயிலில் மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் வந்தது. அதில், கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கோவையில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

அதனால், கோவையில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என வந்த மிரட்டல் இமெயிலால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் விசாரணையில் அந்த இ-மெயில் முகவரி சாத்தூரை சேர்ந்த இசக்கி என்பவரின் பெயரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது மெயிலை யாரோ பயன்படுத்தி மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது மெயிலை போலியாக பயன்படுத்தி குண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “கோவையில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என வந்த மின்னஞ்சல் வதந்தி. யாரும் அச்சப்பட தேவையில்லை’’ என்றார்.

Related posts

அடுத்த 4 ஆண்டுகளில் அனைத்து ரயில் எஞ்சின்களிலும் கவச் தானியங்கி பாதுகாப்பு கருவிகள் பொறுத்தப்படும்: இந்தியன் ரயில்வே

யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க கூடலூர் வனப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு

சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை