தேக அழகைத் தேடித்தரும் தேங்காய் நீர்!

தேங்காய் நீர் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும் ஏற்றதாக திகழ்ந்து வருகின்றது.தேங்காய் தண்ணீர் பல்வேறு ஆரோக்கியமான பண்புகளை கொண்டுள்ளது. இது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் சி, என்சைம்கள், அமினோ அமிலங்கள் மற்றும் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களால் நிறைந்துள்ளது.இதில் இயற்கையான எலக்ட்ரோலைட்டுகளும் அதிகமாக இருப்பதால், தேங்காய் நீர் உடலின் ஈரப்பதத்திற்கு மிகச்சிறந்த மருந்து. மேலும் சருமம், கூந்தல், இவற்றின் ஆரோக்கியத்திலும் தேங்காய் நீரை எவ்வாறு பயன்படுத்தலாம்.

முடி

பலருக்கும் பெரும் இன்னலாக மாறிக்கொண்டிருக்கிறது இந்த மேல்தலையின் கேஷ உதிர்வு. அரை கப் தேங்காய் நீருடன் நான்கு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைமுடியின் வேர்க்கால்கள் துவங்கி நுனி வரை தடவி நன்கு மசாஜ் செய்யவும். பின்னர் ஷாம்பூ அல்லது சீயக்காய் உடன் அலச வறண்ட முடிக்கு போஷாக்குக் கிடைக்கும். மேலும் முடி உதிர்வும் நாளடைவில் குறைந்து புது முடி வளரத் துவங்கும்.

சருமம்

சருமத்தை பிரகாசமாக்க தேங்காய் நீரை பயன்படுத்தலாம். மஞ்சளுடன் தேங்காய் நீரை கலந்து பேஸ்ட்டாக வைக்கவும். பின்னர், கலவையை மென்மையாக்க இன்னும் சிறிது தேங்காய் நீர் சேர்க்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி பின் 10 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவினால் பிரகாசமான சருமம் கிடைக்கும். இந்த முறையில் வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்திற்கு தேவையான ஈரப்பதத்துடன் பளபளக்கும் புத்துணர்ச்சியான சருமம் பெறலாம்.

தோல்

தேங்காய் நீரை பருத்திப் பஞ்சால் நனைத்து உடலின் மேல் தடவிக் குளிக்க வறட்சி நீங்கி இயற்கையான பளபளப்புக் கிடைக்கும். தேங்காய் நீரில் இருக்கும் வைட்டமின் சி இயற்கையாகவே சருமத்தை பிரகாசமாக வைத்திருக்கும்.

– கவிதா பாலாஜிகணேஷ்

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு