300 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்டாரத்தில் 2022-23ம் நிதியாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பல்வேறு ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டமானது, அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளில் பல்வேறு துறைகளின் மூலம் மானிய திட்டங்கள் ஒரே ஊராட்சிகளில் நடைமுறைபடுத்திட ஏதுவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் கீழம்பி, புத்தேரி ஆகிய ஊராட்சியில் ஒரு குடும்பத்திற்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் 300 குடும்பங்களுக்கு, 600 தென்னங்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கினார். அப்போது, தென்னங்கன்று மற்றும் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரிப்பு குறித்தும், விவசாயிகள் நலனுக்காக அரசு வழங்கியுள்ள திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இதில், ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், ஒன்றிய செயலாளர் குமார், ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர் ரேகா ஸ்டான்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா