தேங்காய்தோசை

தேவையானவை

தேங்காய்த் துருவல் – 2 கப்
பச்சரிசி – 200 கிராம்
எண்ணெய் – 100 மில்லி
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

அரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து, களைந்து, நைஸாக அரைக்கவும். அதனுடன் உப்பு, தேங்காய்த் துருவல் சேர்க்கவும். தோசைக்கல்லில் மாவை ஊத்தப்பம் அளவில் ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக
வேகவிட்டு எடுக்கவும்.தேங்காய் அதிகம் மிகுந்து விடும் சமயத்தில், அதைப் பயன்படுத்தி இந்த தோசையைத் தயாரிக்கலாம். இட்லி மிளகாய்ப்பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.

Related posts

பன்னீர் அல்வா

முட்டை இட்லி உப்புமா

செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி