கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் 64 திட்ட அதிகாரிகள்

பணி: Project Officer

i) Mechanical: 38 இடங்கள். (பொது-16, ஒபிசி-4, எஸ்சி-8, எஸ்டி-7, பொருளாதார பிற்பட்டோர்-3). தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி.
ii) Electrical: 10 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, எஸ்சி=2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
iii) Electronics: 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1). தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியரிங் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி.
iv) Civil: 8 இடங்கள் (பொது-4, ஒபிசி-3, எஸ்டி-1). தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி.
v) Instrumentation: 1 இடம் (பொது). தகுதி: இன்ஸ்ட்ரூமென்டேசன் இன்ஜினியரிங்கில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி.
vi) Information Technology: 1 இடம் (பொது). தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/தகவல் தொழில்நுட்பம் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் எம்எஸ்சி அல்லது பி.இ., தேர்ச்சி.
மேற்குறிப்பிட்ட பணிகள் அனைத்திலும் 2 வருட முன்அனுபவம் விரும்பத்தக்கது.

வயது: 17.07.2024 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: முதல் வருடம் ரூ.37 ஆயிரம். 2ம் வருடம் ரூ.38 ஆயிரம். 3ம் வருடம் ரூ.40 ஆயிரம்.விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.கட்டணம்: ரூ.700/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.www.cochinshipyard.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (17.07.2024)

Related posts

சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை