முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா காங்கிரசில் இணைய சந்திரபாபுவின் சதியே காரணம்: ஆந்திர மாநில அரசு ஆலோசகர் பேட்டி

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா காங்கிரசில் இணைய சந்திரபாபுவின் சதியே காரணம் என மாநில அரசு ஆலோசகர் சஜ்ஜலா ராமகிருஷ்ணா கூறினார். ஆந்திர மாநில அரசின் ஆலோசகர் சஜ்ஜலா ராமகிருஷ்ணா நேற்று விஜயவாடாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: முதல்வர் ஜெகன் மோகனை வழக்குகள் போட்டு துன்புறுத்தியது காங்கிரஸ் கட்சி. அதே கட்சியில் அவரது தங்கை ஷர்மிளா சேர்ந்துள்ளார்.

ஒய்எஸ்ஆர் குடும்பத்திற்கு காங்கிரஸ் கட்சி பல பிரச்னைகளை ஏற்படுத்தியது மாநில மக்கள் அனைவருக்கும் தெரியும். இருப்பினும், ஷர்மிளா ஒரு கட்சியின் தலைவராக அவரது முடிவுகளை அவர் எடுத்துள்ளார். ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்ததன் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு சதியே காரணம் ஆகும்.

குடும்பமா? – மக்களா? என முதல்வர் ஜெகன் மோகனிடம் கேட்டால் மக்கள் தான் என ஜெகன் மோகன் இருப்பார். எத்தனை பேர் வந்தாலும் அடுத்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெறுவது என்பது உறுதியாகி உள்ளது. சட்டசபை தேர்தலில் முடிந்தவரை வெற்றி வேட்பாளர்களை தேர்வு செய்து களம் இறக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்