தூய்மையான கடற்கரையின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு; கழிவு மேலாண்மை மற்றும் கடலோர தூய்மை செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் கூடுதல் தலைமைச் செயலாளர்

சென்னை: பசுமை பணி பொறுப்பின் கீழ், கரூர் வைஸ்யா வங்கியின் (KVB) சார்பில் தூய்மையான கடற்கரையின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று (23.06.2024) சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற கழிவு மேலாண்மை மற்றும் கடலோர தூய்மை செயல்பாட்டினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தொடங்கி வைத்தார். கரூர் வைஸ்யா வங்கியின் சென்னை கோட்ட மேலாளர் பி. ஜனார்தனன் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள், வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கடற்கரையில் தேங்கும் குப்பைக்கழிவுகள், கடற்கரை சுற்றுச்சூழலை பாதித்து கடல்சார் உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் சுற்றுலாத்தலமும், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றன. இத்தூய்மைப் பணியில் சுமார் 150 வங்கி ஊழியர்கள், வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சுற்றுப்புறச்சூழல் குறித்தும், கடற்கரையின் தூய்மையின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில் பொதுமக்களுக்கான மருத்துவ முகாம், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கேளிக்கை விளையாட்டுகள் நடத்தப்பட்டன.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு