நாய்களை வகைப்படுத்துவது பற்றி முடிவு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை..!!

சென்னை: ஆக்ரோஷமான நாய்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் வகையில் நாய்களை வகைப்படுத்துவது பற்றி முடிவு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நாய்களை வகைப்படுத்துவது தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கக் கூடாது என ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆக்ரோஷமான வெளிநாட்டு நாய்களை இறக்குமதி, விற்க தடை விதித்து ஒன்றிய கால்நடைத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஜூன் 1-க்குள் நாய்களை வகைப்படுத்துவது குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்க ஒன்றிய கால்நடைத்துறை கோரியது. இந்திய கென்னல் கிளப் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நிபுணர்கள் அடங்கிய புதிய குழுவை அமைத்துதான் மக்களிடம் கருத்து கேட்கும் நடவடிக்கையை தொடங்க வேண்டும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பொதுமக்களிடம் கருத்துகளை கேட்கும் நடைமுறைகளை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Related posts

ஈரோடு மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றில் இறங்கி குளிக்க தடை விதிப்பு

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று, நாளை மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத்தடை

ஆகஸ்ட் 03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை