வகுப்புவாத அரசியலுக்கு மக்களவை தேர்தல் முற்றுப்புள்ளி வைத்தது: அகிலேஷ் யாதவ் பேச்சு

புதுடெல்லி: மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சமாஜ்வாடி தலைவரும் உபி கன்னோஜ் தொகுதி எம்பியுமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘‘2024 ஜூன் 4ம் தேதி வகுப்புவாத அரசியலில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற நாள்.

இந்த தேர்தலில் என்றென்றுக்குமான வகுப்புவாத அரசியல் தோற்றுவிட்டது. இது நேர்மறை அரசியலின் புதிய சகாப்தம், அரசியல் சாசனம் வென்றுள்ளது. அயோத்தி உள்ளடக்கிய பைசாபாத்தில் பாஜ தோல்வி அடைந்திருப்பது ராமரின் விருப்பமாக கூட இருக்கலாம். நான் நேற்றும் மின்னணு வாக்கு இயந்திரத்தை நம்பவில்லை, இன்றும் நம்பவில்லை’’ என்றார்.

Related posts

திமுக இளைஞர் அணி செயலாளராக 6வது ஆண்டு கட்சிப்பணியில் உறுதுணையாக நிற்பவர்களுக்கு உதயநிதி வாழ்த்து: மக்கள் பணி தொய்வின்றி தொடர அழைப்பு

கேரள காங்கிரஸ் தலைவரை மந்திரவாதம் மூலம் கொல்ல முயற்சி? வீட்டுக்கு அருகே தகடுகள் கைப்பற்றப்பட்ட வீடியோ வெளியானதால் பரபரப்பு

தேர்தல் தோல்வி எதிரொலி பாஜ அமைச்சர் ராஜினாமா