Tuesday, October 22, 2024
Home » சிட்டி யூனியன் வங்கியின் 2ம் காலாண்டில் மொத்த வருமானம் ரூ.1660 கோடி: நிர்வாக இயக்குனர் காமகோடி தகவல்

சிட்டி யூனியன் வங்கியின் 2ம் காலாண்டில் மொத்த வருமானம் ரூ.1660 கோடி: நிர்வாக இயக்குனர் காமகோடி தகவல்

by Mahaprabhu

சென்னை: சிட்டி யூனியன் வங்கியின் இரண்டாம் காலாண்டில் மொத்த வருமானம் ரூ.1660 கோடியாகவும், இதர வருமானம் ரூ.226 கோடியாகவும் உள்ளது என நிர்வாக இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். கும்பகோணத்தை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் 2024-25ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு கணக்கு மற்றும் முதல் அரையாண்டிற்கான முடிவுகளை சென்னையில் அதன் நிர்வாக இயக்குனர், முதன்மை செயல் அதிகாரி காமகோடி வெளியிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் இரண்டாம் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.1660 கோடியாகவும், அதில் இதர வருமானம் ரூ.226 கோடியாகவும் உள்ளது. மொத்த லாபம் ரூ.428 கோடியாகவும், நிகர லாபம் ரூ.285 கோடியாகவும் உள்ளது. வங்கியின் நிகர வராக் கடன் 1.62 சதவீதமாகவும் வங்கியின் சொத்தின் மீதான வருவாய் 1.59 சதவீதமாகவும் உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.3241 கோடியாகவும் அதில், இதர வருமானம் ரூ.418 கோடியாகவும் உள்ளது.

மொத்த லாபம் ரூ.802 கோடியாகவும், நிகர லாபம் ரூ.550 கோடியாகவும் உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் வங்கியின் மொத்த வியாபாரம் ரூ.1,06,091 கோடியாக உள்ளது. மேலும் வங்கியின் வைப்பு தொகை மற்றும் கடன்கள் முறையே ரூ.57,369 கோடியாகவும், ரூ.48,722 கோடியாகவும் உள்ளது.வங்கியின் நிகர மதிப்பு கடந்த ஒற்றை அரையாண்டில் இருந்த மதிப்பான ரூ.7859 கோடியில் இருந்து ரூ.8,838 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கி இன்று வரை 812 கிளைகள் மற்றும் 1682 தானியங்கி பட்டுவாடா இயந்திரங்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

two × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi