மாநகர பேருந்து கண்ணாடி உடைப்பு

பூந்தமல்லி: கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி மாநகர பேருந்து (தடம் எண்:104) நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணிகள் அதிகளவில் இருந்ததால், ஏரிக்கரை நிறுத்தத்தில் நிற்காமல் சிறிது தூரம் தள்ளிப்போய் நின்றது. இதனால், பேருந்துக்காக காத்திருந்த பயணிகளில் ஒருவர் ஆத்திரமடைந்து, சாலையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து, பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில் மதுரவாயல் போலீசார், வழக்குப்பதிவு செய்து மாநகர பேருந்தின் கண்ணாடியை உடைத்தவரை பிடித்தனர். போதையில் பேருந்து மீது கல் வீசியது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related posts

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கடன் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை :உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை மீட்க உத்தரவு