சிஐடியு தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: பொன்னேரி அடுத்த கொக்குமேடு கிராமத்தில் தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் உள்ளது. இதன் முன்பு சிஐடியு தொழிலாளர் அமைப்பினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாநிலத் துணைத் தலைவர் விஜயன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் நாகராஜன், பொருளாளர் லட்சுமணன், துணை செயலாளர் சீனு, துணைத் தலைவர் முனுசாமி மற்றும் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சிஐடியு பொறுப்பாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு