சிட்ரான் புளூ எடிஷன்

சிட்ரான் நிறுவனம் சி3 மற்றும் சி3 ஏர்கிராஸ் ஆகிய கார்களை சந்தைப்படுத்தியுள்ளது. புதிய நிதியாண்டு துவங்கியுள்ள நிலையில், இந்த கார்களின் விலையை இந்த நிறுவம் குறைத்துள்ளது. இதன்படி சி3 காரின் துவக்க ஷோரூம் விலை ரூ.17,000 குறைந்து ரூ.5.99 லட்சமாக இருக்கும். சி3 ஏர் கிராஸ் கார் விலை ரூ.1 லட்சம் குறைந்து ரூ.8.99 லட்சமாக இருக்கும். குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு மட்டுமே இந்த சலுகை உண்டு எனவும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த மாத இறுதி வரை மட்டும் இந்த தள்ளுபடி சலுகை அமலில் இருக்கும் எனவும் நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர, சிட்ரான் சி3 மற்றும் இசி3 கார்களின் ஸ்பெஷல் புளூ எடிஷன் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓஆர்விஎம், மிரரர்கள், ஹெட்லைட்டுகள், கதவு கைப்பிடிகள் மற்றும் கூரை விளிம்புகளில் காஸ்மோ புளூ வண்ணம் இடம் பெற்றிருக்கும். பீல் மற்றும் ஷைன் வேரியண்ட்களின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்