குடியுரிமை சட்டம் அமல் மக்களை திசை திருப்பும் செயல்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்

புதுடெல்லி: கு தேசியவாத காங்கிரஸ் கட்சி-சரத்சந்திர பவார் கட்சித்தலைவர் சரத்பவார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ பிரதமர் மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பின் முடிவு, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்காக மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி’ என்றார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில்,’ இது பாஜவின் கவனத்தை சிதறடிக்கும் விளையாட்டு. 10 ஆண்டுகால ஆட்சியில் லட்சக்கணக்கான குடிமக்கள் ஏன் நாட்டின் குடியுரிமையை கைவிட்டனர் என்பதையும் ஒன்றிய பாஜ அரசு விளக்க வேண்டும். நாட்டின் குடிமக்கள் வாழ்வாதாரத்திற்காக வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, இங்கு இருக்கும் ​​​​மற்றவர்களுக்கு குடியுரிமைச் சட்டம் கொண்டு வருவதன் மூலம் என்ன நடக்கும்? ’ என்றார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் செய்தித் தொடர்பாளர் ரிஷி மிஸ்ரா கூறுகையில்,’ 2019ல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு பாஜ, சிஏஏவை மறந்துவிட்டது. இப்போது, ​​தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் திடீரென்று உங்களுக்கு அது நினைவிருக்கிறது. அவசரம் என்றால், நீங்கள் எதற்காகக் இத்தனை வருடம் காத்திருந்தீர்கள். இது சந்தேகத்திற்கு இடமின்றி தேர்தலை சந்திக்கும் பாஜவின் பிரித்தாளும் தந்திரம். ? ஆனால், வாக்காளர்கள் விளையாட்டில் புத்திசாலிகள் என்பதை பா.ஜ உணர வேண்டும்’ என்றார்.

Related posts

கட்டிடத்துக்கு அனுமதி வழங்காததால் பழங்குடியின மாணவர்களுக்கு கன்டெய்னரில் பள்ளி: தெலங்கானாவில் புதுமை

ராமர் கோயில் தீர்ப்புக்கு பின் அயோத்தியில் நிலங்கள் அபகரிப்பு அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

நிபா வைரசால் மாணவன் பலி மலப்புரத்தில் கட்டுப்பாடுகள் அமல்