அடுத்த ஆண்டு மார்ச்சில் குடியுரிமை சட்ட இறுதி வரைவு தயார்: உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தகவல்

கொல்கத்தா: குடியுரிமை திருத்த சட்டத்தின் இறுதி வரைவு அறிக்கை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தயாராகும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள தாகூர்நகரில் நடந்த கூட்டத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பேசுகையில், “ கடந்த 2 ஆண்டுகளில் குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்பாடுகள் வேகம் பெற்றுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் குடியுரிமை திருத்த சட்டத்தின் இறுதி வரைவு அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது ”என்றார். இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் கூறுகையில், “தேர்தலின்போது மட்டுமே பாஜ மாதுவா மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை நினைவில் கொள்கிறது. மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை பாஜவால் அமல்படுத்த முடியாது” என்றார்.

Related posts

வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி துவங்கியது!

மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது!