குடிமகன்களுக்கு கொண்டாட்டம் ஆந்திராவில் மது விலை குறைப்பு

திருமலை: ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் கட்சி கூட்டணி ஆட்சியின் 100 நாட்கள் நிறைவையொட்டி அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கடந்த ஆட்சியில் தரமற்ற மதுவை கூடுதல் விலைக்கு விற்றுள்ளனர். இதனால் பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் வாக்குறுதிப்படி புதிய மதுபானக்கொள்கை கொண்டுவரப்பட உள்ளது.

இதையொட்டி 6 மாநிலங்களில் அமைச்சரவை கமிட்டி ஆய்வு மேற்கொண்டது. இந்த புதிய மதுபானக்கொள்கை வரும் அக்டோபர் மாதம் அமல்படுத்தப்படும். அதன்படி தற்போது ரூ.120க்கு விற்கப்படும் மதுபானங்கள் ரூ.99க்கு விற்கப்படும். மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கார்டு போன்று தனியாக அடையாள அட்டை வழங்கப்படும் .இவ்வாறு அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு