சின்கோனா மூலிகை தாவரங்கள் வளர்ப்பகத்தில் மூலிகை தாவரங்கள் பராமரிப்பு தீவிரம்

ஊட்டி : ஊட்டி அருகே தொட்டபெட்டா சிகரம் அருகே சின்கோனா பகுதியில் மூலிகை தாவரங்கள் வளர்ப்பகத்தில் வளர்க்கப்பட்டு வரும் மூலிகை தாவரங்கள் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டா அருகே சின்கோனா பகுதியில் மூலிகை தாவரங்கள் வளர்ப்பகம் உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இங்கு தைலம், ரோஸ்மேரி, சிட்ரநெல்லோ, ஜெரேனியம், பார்சிலி, லெமன்கிராஸ் உள்பட 13 வகையான மூலிகை தாவரங்கள் 15 ஏக்கர் நிலத்தில் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த மூலிகை தாவரங்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் தைலங்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மூலிகை தைலங்களான கல்தீரியா தைலம் மூட்டுவலி, கழுத்துக்கட்டி வலி, நெஞ்சு வலி, முடக்கு வாதத்துக்கு நிவாரணியாகும்.

லேமன் கிராஸ் தைலம் எலுமிச்சை வாசனையை கொடுப்பதோடு, வயிற்று உபாதைகளை சரியாக்கும். சிட்ரோடரா தைலம் தலையில் முடி உதிர்வதை கட்டுப்படுத்தும். தைம் தைலம் தோல் படைகள் மற்றும் மூச்சுக்குழாய் சம்பந்தப்பட்ட உபாதைகளை நீக்கும். இந்நிலையில் இங்கு நடவு செய்யப்பட்டுள்ள தைம், ெலமன் கிராஸ் உள்ளிட்ட மூலிகை செடிகள் பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்