சித்தூர் அருகே நடந்த சோதனையில் ₹10 லட்சம் மதிப்புள்ள 12 செம்மரங்கள் பறிமுதல்

*திருவண்ணாமலையை சேர்ந்தவர் கைது

திருமலை : சித்தூர் அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள 12 செம்மரங்கள் பறிமுதல் செய்து, திருவண்ணாமலையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். சித்தூர் மாவட்டம் பாக்கராபேட்டை வன அதிகாரி எம்.தத்தாத்ரேயா தலைமையில் தலகொணா தெற்கு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வனத்துறையினரை கண்டதும் கடத்தல்காரர்கள் செம்மரங்களை வீசிவிட்டு தப்பி ஓடினர். இதனையடுத்து வனத்துறையினர் துரத்திச்சென்றதில் ஒருவர் சிக்கினார். விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா, கீழ்வணக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த ஜி.சுதாகர்(43) என்பது தெரியவந்தது.

வனத்துறையினர் அவரை கைது செய்து அந்த பகுதியில் கடத்தல்காரர்கள் விட்டு சென்ற ரூ.378 கிலோ எடையுள்ள 12 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த செம்மரம் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் எனவும் தப்பியோடியவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் வன அதிகாரிகள் ஜி.பிரதீப் சந்த், கே.லக்ஷ்மி பிரசாத், எச்.சங்கர் ஆகிேயார் தெரிவித்தனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது