சித்தூரில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும்

*போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தகவல்

சித்தூர் : சித்தூரில் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவ ரை கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்படும் என சித்தூர் மாநகராட்சி போக்குவரத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டராக வித்யா பாபு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அவர் மாவட்ட எஸ்பி ரிஷாந்த்துக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் அவர் பேசுகையில், சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தேன். பின்னர் உளவுத்துறை சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தேன். தற்போது இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று சித்தூர் மாநகர போக்குவரத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பதவி ஏற்று கொண்டேன். எனக்கு பதவி உயர்வு வழங்கிய மாநில காவல் ஆணையருக்கும், மாவட்ட எஸ்பி க்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்தூர் மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளேன். அதேபோல் சித்தூர் சர்ச் தெரு மற்றும் பஜார் தெரு சாலைகளில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இப்பகுதியில் கனரக வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்டவை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செல்ல தடை விதிக்கப்படும். அதேபோல் சித்தூர் மாநகரத்தில் எந்த ஒரு பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் இல்லாதவாறு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வேன். இவ்வாவாறு அவர் தெரிவித்தார்.

Related posts

கூட்டுறவு சங்கங்கள் மூலம் டி.ஏ.பி.உரம் வழங்க துரை வைகோ எம்பி கோரிக்கை

ஒரு டிரில்லியன் டாலர் லட்சிய இலக்கை அடைய சுற்றுலாத்துறையின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்: அமைச்சர் ராஜேந்திரன் பேச்சு

அரசியல் லாபத்திற்காக வெற்று போராட்டங்களை அறிவிக்கும் அதிமுக: எடப்பாடிக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்