சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும்

*அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

சித்தூர் : மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். சித்தூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் கலெக்டர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று திங்கட்கிழமை என்பதால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சித்தூர் கலெக்டர் சுமித் குமார் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த மனுநீதி நாள் முகாமில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து 467 பேர் தங்கள் குறைகளை மனுவாக எழுதி கலெக்டர் சுமித்குமாரிடம் வழங்கினார்கள்.

இந்த மனுவில் ஏராளமான பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா வேண்டும், ரேஷன் கார்டு வேண்டும், முதியோர் உதவித்தொகை வேண்டும், சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், எங்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததாகவும் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து மீட்டு தர வேண்டும், டிகேடி நிலத்துக்கு பட்டா செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவாக எழுதி கலெக்டரிடம் வழங்கினார்கள்.

பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் உடனடியாக தங்களின் குறைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கு கலெக்டர் சுமித் குமார் உத்தரவிட்டார். இதில் மாவட்ட இணை கலெக்டர் வித்யாதரி, டிஆர்ஓ புள்ளையா மற்றும் ஏராளமான பல்வேறு துறையை சேர்ந்த மாவட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்கள் வழங்கிய புகார்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Related posts

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் அக்.3ம் தேதி தசரா திருவிழா கொடியேற்றம்: 12ம் தேதி நள்ளிரவு மகிஷாசூரசம்ஹாரம்

ஆந்திராவிலிருந்து அரக்கோணத்துக்கு பைக்கில் கடத்தி வந்த 30 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் : 3 வாலிபர்கள் கைது

மாமல்லபுரம், குற்றாலம் மற்றும் வால்பாறை ஆகிய இடங்களில் புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லங்கள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்