வ.உ.சிதம்பரனார், ராமாமிர்தம், முத்துலெட்சுமி அம்மையார் சிலைகளை காணொலியில் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் அமைக்கப்பட்ட சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் சிலைகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சிலை, கோவை வஉசி பூங்காவில் வ.உ.சிதம்பரனார் சிலை திறக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் சிலையையும் காணொலியில் முதல்வர் திறந்தார்.

Related posts

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை புரட்டிப் போட்டுள்ள ஹெலீன் புயல்: மழை பாதிப்பால் 33 பேர் உயிரிழப்பு

மரபணு குறைபாடுடைய அரிதான வெள்ளை நாகம் கோவையில் பிடிபட்டது

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: 30 வீடுகள் சேதம்