சிட் பண்ட் நடத்தி ₹4½ கோடி மோசடி

*எஸ்பி, ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு

கடலூர் : கடலூர் மாவட்டம் ஆவினங்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கடலூர் எஸ்பி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:எங்கள் ஊரை சேர்ந்த இரண்டு பேர் சிட் பண்ட் நடத்தி வருகிறார்கள். அவர்கள் தொழில் செய்ய மூலதனமாக எங்கள் பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் பணம் பெற்று அந்த பணத்திற்கு வட்டியும் தருவதாக கூறினார்கள். ஆனால் கடந்த இரண்டு வருட காலமாக வட்டியும், அசலும் கொடுக்கவில்லை.

இது குறித்து நாங்கள் அவர்களிடம் சென்று கேட்டால் எங்களை மரியாதை குறைவான வார்த்தைகளால் பேசி வருகிறார்கள். அவர்கள் எங்களிடம் சுமார் ரூ.4 ½ கோடிக்கு மேல் பணத்தை வாங்கி ஏமாற்றி உள்ளனர். எனவே இது குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பணத்தை அவர்களிடம் இருந்து திரும்பி பெற்று தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடமும் சென்று மனு அளித்தனர்.

Related posts

இ-3 சாலை திட்ட பணியை துவக்க கோரி அருப்புக்கோட்டையில் கடையடைப்பு போராட்டம்

3 குற்றவியல் சட்டங்கள்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

OTT தளத்தில் சினிமா, வெப் சீரியல்களை ஒழுங்குபடுத்தி தணிக்கை செய்து வெளியிட உத்தரவிட கோரி மனு