கண்டாச்சிபுரம் அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சொத்தை அபகரிக்க முயற்சி

* போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

* ஆட்சியர் அலுவலகத்தில் கணவர் போராட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சொத்தை அகபரிக்க முயற்சிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுத்து அந்த சொத்தை மீட்டு தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் அவரது கணவன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் அருகே சுந்தரிபாளையத்தை சேர்ந்தவர் தனுசு. இவர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

இதனை தொடர்ந்து அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மனைவி பூங்காவனம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ செலவுக்கு போதிய பணமில்லாத நிலையில் சிரமப்பட்டு வருகிறோம். இந்நிலையில் எனது மனைவிக்கு சொந்தமாக நல்லாபாளையத்தில் ஒரு ஏக்கர் நிலம், வீடு உள்ளது. அந்த இடத்தை அதே ஊரை சேர்ந்த ஒருவர் அபகரித்துத்கொண்டு கூட்டுப்பட்டா என்று கூறி மோசடி செய்து வருகிறார்.

இதுகுறித்து கண்டாச்சிபுரம் காவல்நிலையத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். தற்போது மனைவிக்கு வெளியில் கடன் வாங்கி மருத்துவ உதவி செய்து வருகிறேன். எனவே என் மனைவிக்கு சேர வேண்டிய சொத்தை அபகரித்து வரும் சம்மந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டுத்தர வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி வாக்குமூலம்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,560-க்கு விற்பனை..!!