சீனாவில் களைகட்டிய காந்தி ஜெயந்தி

பீஜிங்: புகழ் பெற்ற சீன சிற்பி பேராசிரியர் யுவான் சிகுன் அவர்களால் சிறப்புற செதுக்கப்பட்ட மகாத்மா காந்தியின் முழு உருவ சிலை சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள சாயோங் பூங்காவில் கடந்த 2005ம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து சீனாவிலும் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த காந்தி பிறந்த நாள் விழா 2022ம் ஆண்டு முதல் மீண்டும் களைகட்ட தொடங்கி உள்ளது.
அதன்படி காந்தியடிகளின் 155வது பிறந்தநாளையொட்டி நேற்று சாயோங் பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சீன பள்ளி குழந்தைகள் ஒன்றுகூடி மாண்டரின் மொழியில் காந்தியின் போதனைகளை படித்தனர்.

Related posts

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

அக்.03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!

கதர் தொழிலுக்கு கை கொடுக்கும் வகையில் கதர், கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டும்: காந்தியடிகளின் பிறந்தநாளில் முதல்வர் வேண்டுகோள்