சீனா ஓபன் டென்னிஸ் முச்சோவா முன்னேற்றம்: சபெலென்கா அதிர்ச்சி

பெய்ஜிங்: சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை கரோலினா முச்சோவா தகுதி பெற்றார். காலிறுதியில் பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலென்காவுடன் (26வயது, 2 வது ரேங்க்) மோதிய முச்சோவா (28 வயது, 49வது ரேங்க்) 7-6 (7-5), 2-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.

விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி 46 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு காலிறுதியில் சீனாவின் கின்வென் ஸெங் 5-7, 6-0, 6-4 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவாவை வீழ்த்தினார். இப்போட்டி 2 மணி, 32 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. அரையிறுதியில் கோகோ காஃப் – பவுலா படோசா, முச்சோவா – கின்வென் ஸெங் மோதுகின்றனர்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு